அலீப் பிரியாணி ஓட்டல் சிக்கனில் நெளிந்த புழு..! திகைத்துப்போன பெண்..! மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த மாஸ்டர்

0 742

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி ஓட்டலில் வாங்கிச்சென்ற செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு நெளிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

சென்னை மேற்கு தாம்பரம் ராமகிருஷ்னா நகரை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக்கான சவுந்தர்ராஜன், தனது சகோதரி ரேவதிக்கு முடிச்சூர் சாலையில் உள்ள ஆலிப் பிரியாணி கடையில் இருந்து வியாழக்கிழமை இரவு செட்டி நாடு சிக்கன் பார்சலாக வாங்கி சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று பார்சலை திறந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென சிக்கனில் புழுக்கள் நெழிந்ததை கண்டு தனது சகோதரி அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த சவுந்தர்ராஜன் உடனடியாக பார்சலை மீண்டும் கடைக்கு எடுத்து சென்று உணவக உரிமையாளரிடம் காட்டியபோது தங்களுக்கும், இதுக்கும் எந்தவித சம்பதமும் இல்லை என்று அசால்டாக பதிலளித்ததாக கூறியுள்ளார்.

உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், செயல்படாமல் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் சிக்கன் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்துக்கு அருகில் புழுக்கள் நெளிவதை கண்டு என்ன இது? என்று கேட்டு எச்சரித்த நிலையில், பிரிட்ஜை சுத்தம் செய்த கையோடு “இனிமேல் இது போன்று கவனக்குறைவாக உணவு பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம்” என்று மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்த ஓட்டல் உரிமையாளர், சவுந்தர்ராஜனிடம் சிக்கனுக்கு பெற்ற பணத்தையும் திரும்ப கொடுத்து சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகின்றது.

பணத்தை வாங்க மறுத்த சவுந்தர்ராஜன் தாம்பரம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்திலுக்கு, புழு சிக்கன் குறித்து புகார் அளித்தார். வெள்ளிக்கிழமை காலை வரை தங்கள் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக ஆர்வலர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சவுந்தர்ராஜன் அவரது சகோதரி ரேவதி உள்ளிட்டோர் உணவகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கேட்டபோது, சம்பவத்தன்று இரவு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்ததை ஒப்புக் கொண்ட ஓட்டல் உரிமையாளர், தனது ஓட்டல் உணவில் எந்த தவறும் இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments