13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் 2வது கட்ட தேர்தல்
13 மாநிலங்களில் 2வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பிடல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென உயிரிழந்ததால் அந்த தொகுதி தேர்தல் 3வது கட்டத்திற்கு மாற்றப்பட்டது.
ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டிலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போட்டியிட்ட ராஜஸ்தானின் கோட்டாவிலும், ஹேமமாலினி போட்டியிட்ட உத்தர பிரதேசத்தின் மதுராவிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது
Comments