"தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்": உச்சநீதிமன்றம்
தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இ.வி.எம்., விவிபேட் ஆகியவை குறித்து தாங்கள் ஆய்வு செய்து அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் ஒப்பிட்டு பார்க்கக்கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், வாக்குப்பதிவு அல்லது எண்ணிக்கையில் குளறுபடி என்று வேட்பாளர் ஒருவர் கருதினால், அப்பிரச்னையை அணுகுவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டனர்.
Comments