“இவர முடிச்சிட்டா பங்சன் ரத்தாயிரும்” காதலில் விழுந்த பெண்ணின் கொடூர மாஸ்டர் பிளான் கொலை ..! மகனின் வாழ்வும் வீணாப் போச்சி

0 967

ஈரோடு மாவட்டம், புங்கம்பாடி பாறை வலசு அருகே தனது கணவர் ஏற்பாடு செய்த சுப நிகழ்ச்சியை நிறுத்த பெண் ஒருவர் காதலனுடன் சேர்ந்து நெருங்கிய உறவினரை கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே உள்ள புங்கம்பாடி பாறை வலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. பாராளுமன்ற தேர்தல் நாளான கடந்த 19- ஆம் தேதி இரவு 12- மணி அளவில் அவரது தோட்டத்து வீட்டில் உடல் எரிந்த நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

முதலில் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் , கருகிய சடலத்தின் பல்வேறு பாகங்களில் 10 இடங்களில் வெட்டுக்காயம் இருப்பதை கண்டுபிடித்ததால் யாரோ கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து பழனிச்சமியின் உறவுக்கார பெண்ணான மாசிலாமணி என்பவரை பிடித்து விசாரித்த போது முதியவர் கொலைக்கான மர்மம் விலகியது.

வண்ணாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த தங்கமணியின் மனைவி மாசிலாமணி, தம்பதியர் இருவரும் அருகில் உள்ள நூல் மில்லில் வேலைப்பார்த்து வந்தனர். அங்கு வேலைப்பார்த்து வந்த தமிழன் என்ற இளைஞருடன் மாசிலாமணிக்கு திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தமிழன் , மாசிலாமணியிடம் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை கேட்டுள்ளார்.

மகளின் திருமணத்துக்காக கணவர் சேர்த்து வைத்த 10 சவரன் நகைகளையும் , கண்ணை மறைத்த காமுக காதலால் தூக்கிக் கொடுத்துள்ளார் மாசிலாமணி, அதனை விற்று தனது கடனை தமிழன் அடைத்த நிலையில், மாசிலாமணியின் மகள் வயதுக்கு வந்துவிட மஞ்சள் நீராட்டு விழா நடத்த தங்கமணி முடிவு செய்துள்ளார்.

மகளின் நகைகளை காதலனிடம் கொடுத்து விட்டதால் மஞ்சள் நீராட்டு விழாவை நிறுத்த யோசித்தார் மாசிலாமணி. தனது நெருங்கிய உறவினரும் , வசதி படைத்தவருமான பழனிச்சாமியை கொன்று நகைபணத்தை கொள்ளை அடித்தால் நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டு விடும், 10 சவரன் நகையையும் திரும்ப வாங்கிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தேர்தல் நாளன்று தனது காதலன் தமிழன், 17 வயது மகன் ஆகியோருடன் சேர்ந்து பழனிசாமியை கொலை செய்து தடயத்தை மறைப்பதற்காக தீவைத்து எரித்ததாக மாசிலாமணி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாசிலாமணி , தமிழன் ஆகியோரை கைது செய்த போலீசார் 17 வயது சிறுவனை சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கண்ணை மறைத்த காமத்திற்காக மகளின் நகைகளை அள்ளிக்கொடுத்து விட்டு , மகனின் வாழ்க்கையை வீணடித்துவிட்டு , உறவினரை கொலை செய்ததாக,வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வருகின்றது இந்த திருமணம் கடந்த காதல் சிறைப் பறவை ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments