காங்கிரஸில் மன்சூர் பேக்கரி டீலிங் என் கட்சியை நீங்க வச்சுக்கங்க.. உங்க கட்சியில என்ன சேர்த்துக்கங்க..! காங்கிரஸ் மேல அவ்வளவு பாசமா ..?!

0 612

காங்கிரசில் சேர விரும்புவதாக கடிதம் கொடுத்து 6 மாதமாக காத்திருந்த மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு நெஞ்சுவலிக்க பிரசாரம் செய்த கையோடு மீண்டும் காங்கிரசில் சேர விரும்புவதாக கடிதம் கொடுத்து சிரிக்காமல் காமெடி செய்துள்ளார்

இந்திய ஜனநாயக புலிகள்.. இது தான் நம்ம மன்சூர் 2 மாசத்துக்கு முன்பு தொடங்கிய கட்சி..!

6 மாசத்துக்கு முன்பு காங்கிரஸில் இணைய விரும்புவதாக மன்சூர் கொடுத்த கடிதத்தை காங்கிரஸ் தலைமை ஒரு பொருட்டாக கருதாததால் புதிய கட்சி தொடங்கினார் மன்சூர் அலிகான்

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அழைக்காமலேயே தன்னிச்சையாக அதிமுக அலுவலகத்திற்கு சென்றதால் கட்சியில் இருந்து மன்சூரை நீக்குவதாக ஒருவர் அறிவித்தார்

அதிமுக கூட்டணி கதவை சாத்தியதால் , வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேச்சையாக களமிறங்கி வீதி வீதியாக வித்தை காட்டாத குறையாக நெஞ்சுவலிக்க பிரச்சாரம் செய்தார்

தேர்தல் முடிவு வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் பழைய கடிதத்தை தூக்கிக் கொண்டு மீண்டும் சத்தியமூர்த்திபவனுக்கு சென்ற மன்சூரலிகான், தேதியை கூட மாற்றாமல் கடிதம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையிடம் வழங்கினார்

தனது கட்சியை காங்கிரஸில் இணைத்துக் கொண்டு, தன்னை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளுமாறு பொன்னாடை அணிவித்து கோரிக்கை விடுத்தார் மன்சூரலிகான்.

மன்சூரலிகான் கடந்த காலத்தில் டி.ராஜேந்தரின் லட்சிய திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளில் இணைந்தவர் என்றும் தேர்தலுக்கு முன்பு சேர்ந்திருந்தாலாவது காங்கிரசுக்கு ஒரு ஓட்டு கூடுதலாக கிடைச்சிருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments