ஏப். 29 வரை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகலாம் - வானிலை ஆய்வு மையம்

0 273

தமிழ்நாட்டில் வரும் 29-ஆம் தேதி வரை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கும் காற்றின் ஈரப்பதம் காரணமாக அசவுகரியமும் அதிகமாகும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

வெப்பம் அதிகரித்து வரும் சூழலால் கால நிலை மாற்றம் ஏற்பட்டு, வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் மட்டுமே தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும் நிலை மாறி, இனி வரும் ஆண்டுகளில் வட கிழக்கு மற்றும் தென் மேற்கு ஆகிய இரு பருவ மழை காலங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments