சைபர் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை
சைபர் மோசடிக்கு பயன்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வங்கிகளுக்கு அனுமதிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் போலீசார் குற்ற அறிக்கை அளித்த பிறகே மோசடி செய்பவர்களின் கணக்குகளை முடக்கும் நடைமுறை தற்போது உள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டு, புகார்தாரரின் பணத்தை மீட்பதில் சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு சைபர் மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆர்.பி.ஐ. புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments