தாம்பரம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 60,சவரன் தங்க நகைகள் கொள்ளை

0 254

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர்,நேதாஜி நாகர் பகுதியில் வசித்து வருபவர், குப்புசாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது மனைவி ஷாமிலா வீட்டை பூட்டாமல் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது
அலமாரியில் வைத்திருந்த 60,சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முனுசாமியின் வீட்டின் முதல் தளத்தில் குடியிருக்கும் விமலா என்பவரின் கணவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து வீட்டிலிந்த விமலாவிடமும் விசாரணை மேற்கொண்டபோது திடீரென சமையலறைக்குச் சென்ற அவர், அங்கிருந்த கத்தியை எடுத்து தனது கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments