குடும்ப சொத்துக்களை காப்பாற்ற வாரிசுரிமை வரி திட்டத்தை ராஜீவ் ரத்து செய்தார்: பிரதமர்
இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு தங்களது குடும்ப சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவே நடப்பில் இருந்த வாரிசுரிமை வரி திட்டத்தை அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், தங்களது சொத்துக்களை காப்பாற்றிக்கொண்ட காங்கிரஸ் தற்போது, வாரிசுரிமை வரியை மீண்டும் கொண்டுவந்து மக்களின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், அக்கட்சியின் கொள்ளையடிக்கும் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே பெரிய தடுப்புச் சுவராக தாம் நிற்பதாகவும், நாட்டின் 80 கோடி பேருக்கு எவ்வித மத பாகுபாடின்றி இலவச ரேஷன் பொருட்களை பா.ஜ.க. அரசு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
Comments