தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை மையம்
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றக் கூடியவர்களுக்கு வெப்பம் தொடர்பான உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெயில் நேரத்தில் அவசியம் வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீரை உடன் வைத்துக் கொண்டு அவ்வப்போது அருந்த வேண்டும் என்றும் கூடுமானவரை 11 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments