மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்வில் பக்தர்கள் வழிபாடு
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் , மோகினி அவதாரம் என அடுத்தடுத்து நடைபெற்ற அலங்காரங்களை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுத்தருள, இன்றிரவு தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்தை அடைகிறார். அங்கு பூப்பல்லக்கு நடைபெறவுள்ளது.
Comments