காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் சாம் பிட்ரோடாவின் வாரிசுரிமை சொத்து மறுவிநியோகம் குறித்த கருத்து
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் சாம் பிட்ரோடாவின் வாரிசுரிமை சொத்து மறுவிநியோகம் குறித்த கருத்துகள் பேசுபொருளாகியுள்ளநிலையில், அமெரிக்காவின் சில மாநிலங்களில் அமலில் உள்ள வாரிசுரிமை வரி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, சொத்து உரிமையாளரின் மனைவி மற்றும் அறக்கட்டளைகள் இந்த வரியில் இருந்து விலக்கு பெறுகின்றன. உரிமையாளரின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் மற்றும் அவரை சார்ந்து வாழும் குடும்ப நபர்களும் விலக்கு பெற தகுதியுடையவர்கள்.
இறந்த பணக்காரரின் குடும்ப உறவு அல்லாதவருக்கு சொத்துகள் சென்றால்தான் சாதாரணமாக வாரிசுரிமை வரி பொருந்துகிறது, அதிலும் ஒன்று முதல் 18 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோரில் 2 சதவிகிதத்தினர் மட்டுமே வாரிசுரிமை வரி செலுத்துகின்றனர்.
இதுபோன்ற இந்தியாவிலும் இருந்த வரிமுறையை 40 ஆண்டுகளுக்கு முன் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது அதை ரத்து செய்தார்.
Comments