கன்னியாகுமரில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட புலி

0 474

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காக்கச்சல் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம் அருகில் 2 தொழிலாளர்களை தாக்கிய புலி, அங்கிருந்த ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

புலியின் உடலை ஆய்வு செய்த வனத்துறையினர், அது 15 வயதுடைய பெண் புலி என்றும், முள்ளம் பன்றியை வேட்டை ஆடியதில் அதன் உடலில் பல இடங்களில் முள்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

புலியின் மரணத்திற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments