அர்ஜென்டினாவில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பைக் கண்டித்து பிரமாண்ட பேரணி
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு கணிசமாக குறைத்ததை கண்டித்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் வீதிகளில் பேரணியாகச் சென்றனர்.
மாணவர்களின் எதிர்கால நலனை திருட வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டது. பியூனஸ் ஏர்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் இலவச இளங்கலைக் கல்வியை பயின்றவர்களில் 5 பேர் நோபல் பரிசு பெற்றிருப்பதாகவும், நாட்டின் அதிபர்களில் 17 பேர் இந்த இலவச கல்வியை பயின்றவர்கள் என்பதால் கல்விக்கான நிதி ஒதுக்கீடை குறைக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டது.
Comments