காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மறுத்தது ஈரான்.. சர்வதேச பிரச்சனையாக்கும் பாக். முயற்சி தோல்வி
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அறிவித்திருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ரைசி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மறுத்ததன் மூலம் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக மாற்றும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வி கண்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் பயங்கரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தானுக்குள் ஈரான் குண்டுகளை வீசியது. அதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் ஈரான் அதிபர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
Comments