தாக்குதல் காணொலியை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்க மறுத்த எலான் மஸ்க்... திமிறு பிடித்தவர் என விமர்சித்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ்
அமெரிக்க பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்கை திமிர் பிடித்தவர் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் சாடியுள்ளார். சிட்னி நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பிரசங்கத்தின்போது 16 வயது சிறுவன் ஒருவன் பாதிரியாரை கத்தியால் தாக்கினான்.
அந்த தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்குமாறு ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது. எக்ஸ் தளத்தில், ஆஸ்திரேலிய பயனர்களுக்கு மட்டும் அந்த பதிவுகள் மறைக்கப்பட்ட நிலையில், மற்ற நாடுகளில் தொடர்ந்து பகிரப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், சமூகத்தில் பிரிவினையை தூண்டும் வீடியோவை நீக்க மறுப்பதன் மூலம் எலான் மஸ்க் தன்னை சட்டத்துக்கு மேலானவராக கருதிக்கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் விமர்சித்துள்ளார்.
Comments