மலேசியாவில் ஒத்திகையின் போது 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பயிற்சி வீரர்கள் உயிரிழப்பு

0 365

மலேசியாவின் லூமுட் எனும் சிறுநகரில் கடற்படை தளத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் தரையில் விழுந்து நொறுங்கின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் இருந்த பயிற்சி வீரர்கள் 7 பேரும் மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நொறுங்கிய ஹெலிகாப்டர்களில் இருந்து உடல்களை மீட்டனர். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments