சாதி மறுப்பு திருமணம் செய்த கணவர் கொல்லப்பட்டதால்... தூக்கில் தொங்கிய இளம் பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

0 718

காதல் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் 9 நாட்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன், அதே ஊரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை 6 மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஃபிப்ரவரி 24-ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை தொடர்பாக ஷர்மிளாவின் அண்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரவீன் கொலைக்கு தனது தாய், தந்தை தான் காரணம் என்று கூறி ஷர்மிளா கடந்த 14-ஆம் தூக்கிட்டுக் கொண்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments