சித்ராபௌர்ணமியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது

0 377

சித்ராபௌர்ணமியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இராமநாதபுரம் அருகே குளத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அழகர் பச்சை பட்டுடுத்தி, குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், அழகர் வெள்ளைக்குதிரையில் புறப்பட்டு கோயில் வளாகத்தில் சுற்றி வந்து வைகை ஆற்றில் இறங்கிய சுவாமியை பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்றனர்.

தேனி மாவட்டம், போடி அருகே உப்புக்கோட்டையில் உள்ள வரதராஜ பெருமாள், மஞ்சள் பட்டுடுத்தி, வெள்ளைக்குதிரையில் வந்து மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வைகை ஆற்றில் இறங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் மஞ்சள் பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் வந்து குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments