கூலிக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த விலை என்ன ? கண்ணதாசனின் வரிகளில் பஞ்ச்..! பழைய வரிகள் என்றாலும் இது புதுசா இருக்கு..!
ரஜினியின் 171 வது படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசரில் கண்ணதாசனின் பாடல் வரிகளை வசனங்களாக ஒலிக்கவிட்டு ரஜினி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது படத்துக்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. கூலி டீசர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதே பெயரில் 1995 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் படத்தை தாயாரித்த செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணனை அனுகி, கனிசமான தொகைக்கு ஒப்பந்தம் பெற்று இந்த படத்திற்காண டைட்டிலை கைப்பற்றியதாக கூறப்படுகின்றது.
டீசரில் ரஜினி பேசும் அப்பாவும்.. தாத்தாவும்.. வந்தார்கள் போனார்கள்... என்ற டயலாக்.. தற்போதைய சினிமா ரசிகர்களுக்கு புதிதாக தெரியலாம், ஆனால் , இந்த வரிகள் 1979 ஆம் ஆண்டு ரஜினி கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் என்பது ரஜினி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்..!
இதே பாடல் வரியை ரங்கா படத்தில் ரஜினி வேறு ஒரு மாடுலேசனில் டயலாக்காக சொல்லி இருப்பார்
அதே போல டீசரின் இறுதியில் அனிருத் ஒலிக்கவிட்டுள்ள டிஸ்கோ இசையும், இளையராஜவின் கைவண்ணத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்றுள்ள வா.. வா.. பக்கம் வா... பாடலின் பாஸ்ட் பீட் வரிகள்..!
எல்லாமே பழசா இருந்தாலும், அதனை கொடுத்த விதத்தில் புதுமையை புகுத்தி , அட்லிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் பக்கா மாஸ் சினிமா கிரியேட்டராக லோகேஷ் தன்னை அடையாளப்படுத்தி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments