கோவிந்தா முழக்கத்துடன் இன்று அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் கள்ளழகர்

0 272

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெறுகிறது.

அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார். நகரின் எல்லையான மூன்றுமாவடி பகுதியில் கோவிந்தா முழக்கத்துடன் எதிர்சேவை செய்து திரளான பக்தர்கள் வரவேற்றனர்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இரவு ஓய்வெடுக்கும் கள்ளழகருக்கு சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு,அழகர்மலையில் இருந்து தலைசுமையாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து தங்க குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.
ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியுடன் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments