பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே மதுரையில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.
வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த பகுதியில் எழுந்தருளி , தங்க குதிரையில் மூன்று முறை வரை வலம் வந்து அருள்பாலித்த கள்ளழகரை கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் தரிசித்தனர்.
Comments