மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தேர்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர்களின் முன்பாக, சங்கு முழங்கியபடியும், பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடியும், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது. பகல் 12 மணிக்குள் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையும்.
Comments