கோவை வாக்காளர்களின் பெயர் நீக்கம் சர்ச்சை: மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம்
கோவை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு விளக்கமளித்துள்ள மாவட்ட ஆட்சியர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது மற்றும் சேர்ப்பது ஆகிய பணிகளில், வாக்குச் சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments