இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா பக்கபலமாக உள்ளது - இலங்கை பிரதமர்

0 336

சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடன் சுமையை சமாளிக்கும் திறன் இலங்கைக்கு உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

மிகக் கடினமான சூழ்நிலையில் இலங்கைக்கு சீனா கைகொடுத்து உதவியதாகவும், இலங்கையின் வளர்ச்சிக்கும், பயங்கரவாத எதிர்ப்புக்கும் சீனா பக்கபலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கியதுடன், ஹம்பன்தோட்டா மற்றும் கொழும்பு துறைமுகங்கள் மேம்பாடு, சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளில் சீனா ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments