நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கேரளாவில் பறவைக்காய்ச்சலின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கோழி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments