சென்னையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்கு பதிவு

0 484

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கள்து வாக்குகளை பதிவு செய்தனர்.

தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை, போயஸ்கார்டனில் உள்ள ஸ்டெல்லாமேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

திருவான்மியூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜீத்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்.

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், விருகம்பாக்கத்தில் காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்

திருவான்மியூர் நெல்லை நாடார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments