தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

0 559

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 68,321 வாக்குச்சாவடிகள் அமைப்பு

தமிழகத்தில் 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்- 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர்

வாக்களிப்பவர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும் - தேர்தல் ஆணையம்


102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

21 மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது

நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, எல்.முருகன் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்

முதல்கட்டத் தேர்தல் பணியில் 18 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்- தேர்தல் ஆணையம்

இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 1.87 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு

முதல்கட்ட வாக்குப்பதிவில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

இன்றைய தேர்தலில் 8.04 கோடி ஆண்களும், 8.23 கோடி பெண்களும், 11,371 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களிக்கின்றனர்

இன்று நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 1,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்- இதில் 134 பெண் வேட்பாளர்கள்


அருணாச்சல்- சிக்கிம் சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் சட்டசபைக்கு 10 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு

அருணாச்சல் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்

அருணாச்சல் சட்டசபைத் தேர்தலில் 50 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

அருணாச்சல்- சிக்கிம் மாநிலங்களில் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments