நாய் கட்டிப்போடும் இடத்தில் பதுக்கப்பட்ட ரூ.4 கோடி.. மொத்தமாக சிக்கியது எப்படி? என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரின் பணம்
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான நிதி நிறுவன அதிபர் ஒருவரது வீட்டில், நாய்கள் கட்டிபோடும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் இருந்து 3 கோடியே 68 லட்சம் ரூபாயை கட்டு கட்டாக தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்
புதுச்சேரி மா நிலம் ரெட்டியார் பாளையம் ஜான்ஸி நகரில் உள்ள நிதி நிறுவன அதிபரும், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளருமான முருகேசன் என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
வீட்டில் நாய்கள் கட்டப்படும் இடத்தில் 2 சாக்கு மூட்டைகள் இருப்பதை கண்டு அதனை திறந்து பார்த்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததால் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருவான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடத்தியதில் மொத்தமாக 3 கோடியை 68 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பணம் எப்படி வந்தது ? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா ? என்பது குறித்து முருகேசனிடம் விசாரித்த போது அவர் நெல்லித்தோப்பு பகுதியில் பெரியபாளையத்தம்மன் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவருவதாகவும் அதன் மூலம் சம்பாதித்த பணம் என்றும் கூறியுள்ளார்.
Comments