முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் நேரடியாக சென்று வாக்களிக்க முன்னுரிமை : சாகு
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடைசி நேரத்தில் வாக்களிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கி 6 மணிக்கு மேல் வாக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை தரப்படும் என்றும் சாகு தெரிவித்துள்ளார்.
Comments