உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமத் விமான நிலையம் தேர்வு

0 425

2024-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையமாக கத்தார் தலைநகர் தோஹாவின் ஹமத் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையமாக இருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடம் பெற்றது.

ஸ்கைடிராக்ஸ் உலக விமான நிலைய விருதுகள் பட்டியலின் முதல் 100 இடங்களில், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையமாக பெங்களூரு கெம்பெகௌடா விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments