வெளியூர் நபர்களை எச்சரித்து விடுதிகளை காலி செய்ய போலீஸ் அறிவுரை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி தொகுதிக்கு உட்பட்ட குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார், ஒவ்வொரு விடுதியாக சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த வெளியூர்காரர்களை உடனடியாக தொகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
சில விடுதிகளில் உள்ள அறைகளில் இருந்து சீட்டுக்கட்டுக்கள் மற்றும் மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments