4500 பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இளையராஜா பதில்

0 277

சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணையில், இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,  இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான் என்று கூறி வாதிட்டார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும் மற்றபடி அமைதியானவன், அடக்கமானவன், நீதிமன்றத்தை மதித்து நடக்க கூடியவர் நான் என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments