டி.எம்.பி வங்கி ஏ.டி.எம்மில் கணக்கில் பணம் குறையாமல் 6 லட்சம் ரூபாய் அபேஸ் ..! இப்படியும் திருடுறாங்களாம்..!
சென்னை பல்லாவரம் ,தமிழ்நாடு மெற்கன்டைல் வங்கியின் ஏ.டி,எம்மில் கணக்கில் பணம் குறையாமல் நூதன முறையில் 6 லட்சம் ரூபாயும், படப்பையில் சவுத் இண்டியன் வங்கியில் 13 லட்சம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் தமிழ்நாடு மெற்கன்டைல் வங்கியின் ஏடிஎம் ஒன்று மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே உள்ளது. அந்த வங்கி ஏடிஎம்க்கு, சம்பவத்தன்று பணம் நிரப்ப சென்றுள்ளனர், ஏடிஎம்மில் பணம் இருப்பது போல் கணக்கு காண்பித்த நிலையில் எடிஎம்மிற்குள் பணம் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பணம் நிரப்ப வந்த பணியாளர்கள் பல்லாவரத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மில் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தபோதும் பணம் இருப்பது போல் தான் காண்பித்தது . ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்த போது அதில் அந்த ஏ.டி. எம் எந்திரத்திடன் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி நூறு ரூபாய் எடுத்தால் 500 ரூபாய் வருவது போல் யாரோ செட்டிங்கில் மாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில் 5,6ஆம் தேதிகளில் ஏடிஎம்மிற்கு வந்த மர்மம் நபர்கள் செட்டிங்கில் மாற்றம் செய்து நூதன முறையில் 6 லட்சம் ரூபாய் வரை பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
வங்கி மேலாளர் ராஜதுரை அளித்த புகாரின் பேரில் மீனம்பாக்கம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இதே போல காஞ்சிபுரம் படப்பை பிரதான சாலையில் அமைந்துள்ள சவுத் இண்டியன் வங்கி ஏடி.எம்.மிலும் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரு ஏ.டி.எம் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ள மர்ம ஆசாமிகளுக்கு , வங்கியின் ரகசிய கோடு நம்பர், பின் எண் ஆகியவைகள் தெரிந்துள்ளது என்பதால் வங்கியோடும், ஏ.டி.எம் எந்திரங்கள் பராமரிபோடும் தொடர்புடையவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக பல தரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments