குறைந்த எடையில் ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
ராக்கெட்டில் உந்து விசையை வழங்கும் ‘நாசில்’ கருவியை குறைந்த எடையில் உருவாக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் கார்பன் மூலக்கூறு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ள நாசில் கருவி திட்டமிட்டபடி சிறப்பான செயல் திறனை உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாசில் கருவியின் எடை 67 சதவீதம் வரை குறைவதால் ராக்கெட்டின் உந்துவிசை மற்றும் எரிசக்தி ஆற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments