ராம நவமியையொட்டி தமிழ்நாட்டில் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ராமநவமியையொட்டி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் உள்ள கோதரண்டராமர் கோயிலில் திருவாபரணங்களுடன் தேரில் ஊர்வலமாக வந்து கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி, பஞ்சவடி ஆஞ்சநேயரிர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு இரண்டாயிரம் லிட்டர் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. துறவிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ராமர் உருவ படத்துடன் பங்கேற்று ராமநாத சுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் ராமரின் ஜனன ஜாதகம் வரையப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களின் ஜாதகங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது.
Comments