இறுதி கட்டத்தில் தேர்தல் பிரச்சாரம்... பரப்பரப்பாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
பெரம்பலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளரும், தனது மகனுமான அருண்நேருவை ஆதரித்து லால்குடி பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், நாகமலை, திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் முறுக்கு விற்பனை செய்து வாக்கு சேகரித்தார்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர், கலைஞர் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சிவராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, நடிகை நமீதா கொளத்தூர் பகுதியில் தொண்டர்களின் இருசக்கர வாகன பேரணியுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, நுங்கம்பாக்கம் பகுதியில் ஹாரிங்டன் சாலையில் வாகன பேரணியுடன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்
விதுதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரைப்பட்டி, அம்மாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். புதுச்சூரங்குடி கிராத்தில் நடந்த மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் பங்கேற்ற ராதிகா, பெண்களுடன் கும்மி அடித்து வாக்கு சேகரித்தார்.
ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தன், வந்தவாசி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார்.
திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகர்கள் கஞ்சா கருப்பு, ரவி மரியா ஆகியோர் மலைக்கோட்டை, தெப்பக்குளம் அண்ணாசிலை, மேல சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
மண்டைக்காடு பகவதியம்மனை தரிசனம் செய்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு செண்டை மேளம் முழங்க, சிலம்பம் சுற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு தொகுதி தி.மு.க வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாநகரில் வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரி அ.தி.மு.க வேட்பாளர் தமிழ் வேந்தன் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேட்டியளித்த அவர், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று கூறினார்.
கரூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முருகநாதபுரம், ரத்தினம் சாலை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம், அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுகவினருக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். பின் அங்கு விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து ஹாக்கி, கூடைபந்து, இறகு பந்து விளையாடினார்.
தென்காசி தொகுதி அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து மேலகரம் பகுதியில் இருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக கழுதூர் கிராமத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்கு சேகரித்தார்.
திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, திருச்செந்தூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, வாடிப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என விமர்சித்தார்.
வேலூர் மக்களவை தொகுதி பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் தொகுதி வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் விராட்டிகுப்பம், வண்டிமேடு, திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
கரூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன், ராயனூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தனர். அப்போது தொண்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் குழந்தை ஒன்றுக்கு விஜயராமச்சந்திரன் என்று பிரேமலதா பெயர் சூட்டினார்.
பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் துறையூரில் கடைசி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குலசேகரபட்டினத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி தொகுதி சுயேச்சை வேட்பாளர் நாட்டாண்மை குணசேகரன் என்பவர் சின்னசேலத்தில் குடுகுடுப்பை பொம்மையை ஆட்டி வாக்கு சேகரித்தார்.
சிதம்பரம் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின் புவனகிரியில் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
திருச்சி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ், திருச்சி உழவர் சந்தையில் இருந்து மாட்டு வண்டியில் பிரசாரத்தை துவக்கினார். கோர்ட் ரோடு, புத்தூர் நான்கு ரோடு, உறையூர், வயலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவருடன் குதிரை வண்டி, ஜல்லிக்கட்டு காளைகளுடன் தொண்டர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக திருப்பூரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாகனப் பேரணி நடத்தினர்.
திருவள்ளூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன். வி. பாலகணபதி சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மணவாள நகர் பகுதியில் இருந்து பழைய டோல்கேட் வரையில் இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். வழியில் ஜூஸ் கடை ஒன்றில் கிர்ணி பழ ஜூஸ் போட்டு துப்புரவு பணியாளர்களுக்கு கொடுத்து அவர் பிரசாரம் செய்தார்.
தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அல்லி நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
உதகையை அடுத்த கடநாடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு படுகர் இன மக்கள் தங்களுடைய பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அருப்புக்கோட்டையில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரும், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டபோது பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பங்களா மேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Comments