கோவை முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் கண்கலங்கிய அண்ணாமலை

0 552

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள நானா நானி என்ற முதியோர் இல்லத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரில் சென்றார். அங்கி தங்கியுள்ளவர்கள் மத்தியில் பேசிய போது அண்ணாமலை கண்கலங்கினார்.

இல்லத்துக்கு தாம் வந்தது வாக்கு சேகரிக்க அல்ல எனவும், தங்களிடம் ஆசி பெற வந்துள்ளதாகவும் கூறி காலில் விழுந்த அண்ணாமலைக்கு We are all with you என்று முதியோர் மலர் தூவி வாழ்த்தினர்.

முன்னதாக, கோவை சின்ன தடாகம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை, அனல் மின் நிலைய சாம்பலைக் கொண்டு செங்கல் தயாரிக்கும் முறையை கற்றுக்கொடுக்கும் திட்டம் மத்திய அரசின் மானியத்துடன் கோவையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரின் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments