வெயில் நல்லது..! வைட்டமின்- டி கிடைக்கும் வாங்கப்பா..! ஒதுங்கிய நிர்வாகிகளை அழைத்த விஞ்ஞானி செல்லூரார்

0 342

மதுரை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வெயிலுக்கு பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளை பார்த்து, வெயில் நல்லதுதான் என டாக்டரே சொல்லிவிட்டார், அட இங்க வாங்கப்பா என்று தனக்கே உரிய பாணியில் கூறினார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரையை பேசச்சொல்லி தோழர், தோழர் என்று மிமிக்ரி செய்தார்.

பிரேமலதா விஜயகாந்த் பரப்புரைக்கு வர தாமதமானதால், கூடியிருந்த பெண்களை பார்த்து ஓரு ஆட்டத்தைப் போடுங்க என்று ராஜூ சொல்ல, அவர்களும் வாராரு வாராரு கள்ளழகர் வாராரு என்ற பாடலுக்கு நடனமாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments