சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மலர் தூவி மரியாதை செய்த முதலமைச்சர் மற்றும் இ.பி.எஸ்
ஆங்கிலேயர்களால், போர் செய்து வீழ்த்தவே முடியாத சிம்மசொப்பனமாய் திகழ்ந்த கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலையின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை பறித்து சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை வந்து வாங்கிக்கொண்டதாக சொல் என்று எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டதால் தீர்த்தகிரி என்ற அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.
அவரது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார்.
Comments