பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்தது ஏன்..?: இ.பி.எஸ் விளக்கம்
அ.தி.மு.க வெற்றி பெற்றால் திட்டங்கள் வரும், தி.மு.க வென்றால் அவர்களின் குடும்பம் தான் வளம்பெறும் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
எங்களுக்கு பிரதமர் யார் என்பது முக்கியமல்ல, தமிழ்நாட்டிற்கு யார் நன்மை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் என்பதால் தனித்து போட்டியிடுகிறோம் என தெரிவித்தார் இ.பி.எஸ்.
கடந்த 6 மாதத்தில் அரிசி விலை கிலோவிற்கு 18 ரூபாயும், மளிகை சாமான்கள் விலை 40 சதவீதமும் உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Comments