"ரூ.100 மானியம் தராத தி.மு.க-வா ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் தரப் போகிறது?" - செல்லூர் ராஜூ கேள்வி
2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தராத தி.மு.க.வா 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் தரப்போகிறது? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இறகுப்பந்து விளையாடியபடி வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , இந்த தேர்தலில் ஓ.பி.எஸ்- இன் பலாப்பழம் பழுக்காது என்றார்.
Comments