பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரச்சாரம்
அகஸ்தியர்பட்டி, நெல்லை
அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோருகிறார்
பிரதமருக்கு யானை சிலையை பாஜக நிர்வாகிகள் பரிசாக வழங்கினர்
வணக்கம் திருநெல்வேலி என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
நெல்லை மண்ணில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதியம்மனின் பாதங்களை வணங்கி உரையைத் துவங்குகிறேன்: பிரதமர்
நெல்லை மக்களின் உற்சாகத்தைப் பார்த்ததும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியினருக்கு தூக்கம் தொலைந்திருக்கும்: பிரதமர்
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பா.ஜ.க.வின் சங்கல்ப்ப பத்திரம் வெளியிடப்பட்டது: பிரதமர்
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் மோடியின் கியாரண்ட்டி கார்டு என்று அழைக்கின்றனர்: பிரதமர்
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் இடம்பெற்றுள்ளது: பிரதமர்
"பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் மோடி கியாரண்ட்டி"
விவசாயம், மீன்வளத்துறைக்கு பல்வேறு திட்டங்கள் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ளன: பிரதமர்
வளர்ந்த தமிழகம், வளர்ந்த பாரதத்துக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வழங்குகிறோம்: பிரதமர்
சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலால் இப்பகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பிரதமர்
தென்னிந்தியாவிலும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளோம்: பிரதமர்
"தென்னிந்தியாவிலும் புல்லட் ரயில் ஓடும்"
தமிழகத்தின் மகளிர் மோடிக்கு ஆதரவு அளித்து வருவதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன: பிரதமர்
பெண்களிடம் மோடிக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என்று அரசியல் நிபுணர்கள் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்: பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில் நாம் தமிழக பெண்களுக்கு அளித்துள்ள திட்டங்கள் தான் இதற்குக் காரணம்: பிரதமர்
தமிழ்நாட்டு பெண்களின் சிரமங்களை உணர்ந்து, அதைத் துடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்: பிரதமர்
குடிநீர் இணைப்பு, வீடு கட்டும் திட்டம், எரிவாயு இணைப்பு, கழிவறைகள், கர்ப்பிணிகளுக்கு உதவி, முத்ரா கடன் போன்றவை பெண்களுக்கான திட்டங்கள்: பிரதமர்
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க. மாறியுள்ளது: பிரதமர்
தமிழகத்தின் பாரம்பரிய தலங்களை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம்: பிரதமர்
இங்கு குழந்தை ஒன்று பாரத மாதா வேடமணிந்து நம்மிடையே வந்துள்ளது: பிரதமர்
திருவள்ளுவர் கலாசார மையம் உலகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளதை சங்கல்ப்ப பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளோம்: பிரதமர்
"தமிழக புராதன சின்னங்கள் உலகப் புகழடையும்"
"மோடிக்கு பெண்களிடையே பெருகி வரும் ஆதரவு"
தி.மு.க., காங்கிரசின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவானது: பிரதமர்
செங்கோல், ஜல்லிக்கட்டு போன்றவற்றை திராவிடம் என்ற பெயரால் எதிர்த்தவர்கள் தான் தி.மு.க.வினர்: பிரதமர்
"தி.மு.க.வின் வெறுப்பு சித்தாந்தம்"
மருது சகோதரர்கள், கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்க்கை முழுவதும் அன்னியர்களுக்கு எதிராக போராடியவர்கள்: பிரதமர்
தேசத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க. இருந்து வருகிறது: பிரதமர்
தென் தமிழ்நாட்டைப் பற்றி யோசிக்கும் போது வீரமும் தேசப் பற்றும் தான் என் நினைவுக்கு வருகிறது: பிரதமர்
முத்துராமலிங்கத் தேவரின் தாக்கத்தால் தான் நேதாஜியின் படைக்கு ஏராளமானவர்கள் தென் தமிழகத்தில் இருந்து சென்றார்கள்: பிரதமர்
இந்தியா வளமான நாடாக வர வேண்டும் என்று கருதிய தேசப் பற்றாளர்களின் கனவை பா.ஜ.க. நனவாக்கி வருகிறது: பிரதமர்
"தேசத்தை விரும்புவோரின் தேர்வு பா.ஜ.க."
சுய சார்பு நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டவர் வ.உ.சிதம்பரம்: பிரதமர்
பசும்பொன் தேவர், காமராஜருக்கு புகழாரம்
வ.உ.சி. அளித்த உத்வேகத்தால் தன்னிறைவு பெற்றுக் கொண்டு இருக்கிறது இந்தியா: பிரதமர்
காமராஜர் அளித்த உத்வேகத்தால் தன்னலமற்ற, நேர்மையான ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது பா.ஜ.க.: பிரதமர்
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் காமராஜரை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது: பிரதமர்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.: பிரதமர்
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதையை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்: பிரதமர்
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் மிகப் பழமையான கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது பா.ஜ.க.: பிரதமர்
தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கும் நரேந்திர மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: பிரதமர்
"தேசத்தின் பாதுகாப்பில் தமிழகத்தின் பங்கு"
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பொய்கள் கூறி, திரை மறைவில் தாரைவார்த்துவிட்டனர்: பிரதமர்
40 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் செய்த பாவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது பா.ஜ.க. தான்: பிரதமர்
குடும்பங்கள் நடத்தி வரும் அரசியல் கட்சிகள் ஊழலில் திளைத்து வருகின்றன: பிரதமர்
"திரைமறைவில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு"
உங்கள் ஆசீர்வாதத்தால் ஊழல்வாதிகளுடன் சேர்த்து போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் எதிர்த்து போராடுவேன்: பிரதமர்
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க விரும்புபவர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள்: பிரதமர்
தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: பிரதமர்
குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதமர்
வெளியே செல்லும் குழந்தைகள் போதை என்னும் நரகத்தில் தள்ளப்படுவதால் செய்வதறியாமல் மக்கள் தவிக்கின்றனர்: பிரதமர்
போதைப் பொருள் கும்பல் யாருடைய ஆதரவுடன் செயல்படுகிறார்கள் என்பது குழந்தைக்குக் கூட தெரியும்: பிரதமர்
"அதிகாரமிக்கவர்களின் அனுமதியுடன் போதை விற்பனை"
"தலைவிரித்தாடும் போதைப் பொருட்கள்"
தமிழக மக்கள் இந்த முறை தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள்: பிரதமர்
பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்று பல ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்: பிரதமர்
ஒரு முறை பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு முதல் முறை வாக்களார்களை கேட்டுக் கொள்கிறேன்: பிரதமர்
இந்த தேர்தலுக்கு உங்களை நான் சந்திப்பது இது தான் கடைசி முறை: பிரதமர்
மக்களை பார்க்கும் போது புதிய வரலாறு படைக்கப்பட இருக்கிறது என்பதை உணருகிறேன்: பிரதமர்
பழைய டேப் ரிக்கார்டர் போல பா.ஜ.க. குறித்த எதிர்ப்பு பாடலை திரும்பத் திரும்ப போடுகின்றனர் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர்: பிரதமர்
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி முகத்தில் கரியை பூச வேண்டும்: பிரதமர்
ஒவ்வொரு நொடியும் என் மனதில் உங்கள் பெயர் தான், இந்த நாட்டின் பெயர் தான் ஓடிக் கொண்டே இருக்கும்: பிரதமர்
உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பார்க்கும் போது இது தேர்தல் கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டமாக தெரிகிறது: பிரதமர்
"முதல் முறை வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள்"
பா.ஜ.க.வைப் பார்த்து பயந்து போய், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை செய்கின்றனர்: பிரதமர்
"தி.மு.க. - காங். முகத்தில் கரி பூச வேண்டும்"
பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன், தமிழக மக்கள் உங்களுடன் இருக்கின்றனர், நானும் இருக்கிறேன்: பிரதமர்
ஏப்ரல் 19-ஆம் தேதி ஒவ்வொரு பூத்திலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: பிரதமர்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் உங்களின் குரலாக டெல்லியில் ஒலிப்பார்கள்: பிரதமர்
நாட்டின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவதற்கு பா.ஜ.க.வினரை தேர்வு செய்து எனக்கு உதவியாக அனுப்பி வையுங்கள்: பிரதமர்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்னுடைய வணக்கத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்: பிரதமர்
டெல்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் கணக்கு போடுபவர்களுக்கு இந்த ஒளி மூலம் தமிழகத்தின் உத்வேகம் தெரிய வேண்டும்: பிரதமர்
Comments