இஸ்ரேலைப்போல் உக்ரைனுக்கும் நட்பு நாடுகளின் உதவி வேண்டும் - அதிபர் ஜெலன்ஸ்கி

0 440

ஈரான் தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிபோன்று, ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுத்து தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கும் நட்பு நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

காணொளி செய்தியில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களமிறங்கி தாக்குதலை முறியடிக்க உதவி செய்ததை உலகமே கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ரஷ்யா தினமும் தாக்கி வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 130 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை தடுத்து வீழ்த்தியதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments