ஈரான் மீது எதிர் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடாது - அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது எந்தவிதமான எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தகுந்த பாதுகாப்பு கொடுக்கும் என்றும், பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படவும் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஈரான் தாக்குதலுக்கு ஜி7 தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என எக்ஸ் வலைத்தளத்தில் பைடன் பதிவிட்டுள்ளார்.
Comments