தேர்தல் விதிகளை மீறியதாக தடுத்து நிறுத்தப்பட்ட அண்ணாமலையின் வாகனம்... ஆதரவாளர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா
கோவை காமாட்சிபுரத்தில் இரவு 10 மணியைக் கடந்து வந்து கொண்டிருந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை போலீசார் மறித்ததால், உதவி ஆணையருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாகனத்தில் செல்லக்கூடாது என்றால் தாம் நடந்து செல்கிறேன் என்று கிளம்பியவரை போலீசார் மீண்டும் தடுத்ததால், அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தாம் 9.58 க்கெல்லாம் மைக்கையும் விளக்கையும் அணைத்துவிட்டு, தன்னைப் பார்க்க நின்றிருந்த மக்களை வாகனத்தில் அமர்ந்தபடியே பார்த்து வணங்கிவிட்டுச் சென்றதாகவும் இதில் என்ன விதிமீறல் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணத்தை காவல்துறை வாகனத்தில் வைத்தே திமுகவினர் கொண்டு செல்வதாகவும் அண்ணாமலை கூறினார்.
எந்த விதிமுறையின் அடிப்படையில் தன்னைத் தடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மேலிட உத்தரவு என போலீசார் தெரிவித்தாகவும் அண்ணாமலை கூறினார்.
Comments