தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

0 277

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி, தனக்கன்குளம், கைத்தறி நகர், நிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய விஜய பிரபாகரன், எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட முயற்சிக்காமல், அரசியல் கட்சியினர் அதனை வைத்து அரசியல் செய்வதாக கூறினார்.

 

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வத்திற்கு அக்கட்சியினர் பண மாலையை அணிவித்தனர்.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, சோழவந்தான் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்திற்கிடையே செய்தியாளரை சந்தித்த ஆர்.பி. உதயகுமார் ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ஒரு கவுன்சிலரை கூட ஜெயிக்க வைக்க முடியாத அண்ணாமலை அதிமுக தலைமை பற்றி அவதூறாக பேசி வருவதாக விமர்சித்தார்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தார். தட்டார்மடம் மெயின் பஜாரில் கனிமொழிக்கு வரவேற்பு அளித்தபோது, அவரது வாகனத்தை நோக்கி அழைத்துவரப்பட்ட குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தார்.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர், வேலுச்சாமிபுரம், திருக்காம்புலியூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் காமராஜ், தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் மருத்துவகல்லூரி சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டு நடைபயிற்சி செய்தவர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

 

தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழினிசெட்டிப்பட்டி பகுதியில் நடந்து சென்று வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ரிசர்வ் லைன் பகுதியில் பணியாரக் கடையில், பணியாரம் சுட்டுக் கொடுத்து சரவணன் வாக்கு சேகரித்தார்.

கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணுவாய் பகுதியில் பிரச்சார மேற்கொண்டார். 

 திருச்சி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதன், ஸ்ரீரங்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மணல் கொள்ளையை தடுப்பதாக காவிரி ஆற்றின் நடுவே நின்று உறுதிமொழி ஏற்றார்.

நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் K.P.ராமலிங்கம், ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில் வீடுவீடாக சென்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து மடலுடன், தாமரைப் பூ வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், மேளம் அடித்து வாக்கு சேகரித்தார்.

வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, வியாசர்பாடி ஏரிக்கரை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு பத்தாயிரம் சாக்லேட்களால் கட்டப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், தானே புயல் பேரழிவின்போது 2000 கோடி ரூபாய் நிதி கிடைக்க தன் ஆவணப்படம் உதவியதாகக் கூறினார்.

 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிர்வாகிகள், சாலையில் சென்றவர்களிடம் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து ஓட்டு கேட்டனர்.

 

ராணிப்பேட்டையில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருப்பலி முடித்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு வாக்கு சேகரித்தார்.

 

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்கு சேகரித்தார்.

 

 

 

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதூர், தாளியாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

 

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, வேடசந்தூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூடியிருந்த கூட்டத்தில் பெண் ஒருவரிடமிருந்து குழந்தையை ஜோதிமணி வாங்கி கொஞ்சி விளையாடினார்.

 

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திய திமுக அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகையையும் நிறுத்தி விடுவார்கள் என காயத்ரி ரகுராம் பேசினார்.

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி வேட்பாளர் மாதேஸ்வரன், ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விற்றும், கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்று கிறிஸ்துவ மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

 

தஞ்சை தொகுதி திமுக வேட்பாள் முரசொலி, தனது சொந்த ஊரான தென்னங்குடி கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.

 

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, தொகுதியில் சிப்காட் அமைத்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

 

 

வெளிநாடுகளில் உள்ளதுபோல் கொடைக்கானலில் ரோப் கார் அமைக்க மத்திய அரசிடம் திட்டம் உள்ளதாக, அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா தெரிவித்தார்.

 

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, கொடைக்கானல் பெருமாள் பிரிவு பகுதியில் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திருச்சுழி உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த மூன்றாண்டுகால திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.

 

ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன், சித்தோடு நான்கு சாலை சந்திப்பில் உள்ள கடைகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஜெயபிரகாஷ் அங்குள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பையா வெற்றி பெற்றால் நிர்வாகிகளில் பலர் எம்.எல்.ஏ ஆக வாய்ப்புள்ளது என்றார்.

 

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

சட்டமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க தமக்கு ஒரு வாய்ப்பு தரும்படி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கட்பட் பிரச்சாரம் செய்தார்.

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பிரச்சாரம் செய்தார்.

 

நாகப்பட்டினம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பரப்புரையாற்றியபோது ஏராளமானவர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர்.

 

திருவள்ளூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தமிழ்மதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஆம்ஸ்ராங் ஆயில்மில் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

சிதம்பரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகே பூ கடையில் பூ கட்டி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments