இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 200 ஏவுகணைகள், டிரோன்களை அழிக்கப்பட்டன- அமெரிக்கா

0 574

இஸ்ரேலை நோக்கி ஈரானில் இருந்து செலுத்தப்பட்ட 200 க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளையும் வெடிமருந்துகள் நிரம்பிய டிரேன்களையும் 5 மணி நேரமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் எதிர்கொண்டு அழித்துவிட்டதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்குதலையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் அதன் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலையும் அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் இரும்புக்கவசம் அமைத்து பாதுகாப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments