தேனி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட டிடிவி தினகரன்

0 302

தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.

ஐஐடி தேர்வுக்கான பயிற்சி நிறுவனம், பி.எம்.ஸ்ரீ மற்றும் நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், திண்டுக்கல் முதல் சபரிமலை வரையலான ரயில் பாதை, சென்னையிலிருந்து போடிக்கு தினசரி ரயில் சேவை, உசிலம்பட்டி புறவழிச்சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும் நிறைவேற்றப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி - திப்பரேவு அணைத் திட்டம் செயல்படுத்த மீண்டும் முயற்சி செய்யப்படும் என டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments