இப்படி ஒரு முரட்டு பாசமா.. முடியலப்பா முடியல..! திமுக வேட்பாளரை மறித்து திமுகவினர் அட்டகாசம்

0 575

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம், மறைமலைநகர் 8வார்டு இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது வேட்பாளருக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்க வரச்சொல்லி திமுகவினர் கூற... நேரமில்லை என்று வேட்பாளர் இறங்க மறுத்தார்

உங்களுக்காக 3 மணி நேரமாக காத்திருக்கிறோம்.. இறங்கி வர மாட்டீங்களா..? என்று கேட்க, இறங்கி வர முடியாதுடா ? என்று வண்டியில் இருந்து திமுக நகர்மன்ற தலைவர் குரலை உயர்த்தினார்

பெண்கள் அவருக்கு நம்ம ஓட்டு வேணாமாம் வாங்க போகலாம் என்று கூற, இறங்கி வந்தால் தான் வழிய விடுவோம் என்று சிலர் மறித்து நின்றதால் வேறு வழியில்லாமல் இறங்கி சென்று மாலை மரியாதையை வாங்கினார் வேட்பாளர் செல்வம் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments